பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், 11,40,770 ஊழியர்களுக்கு ரூ 2,009.61 கோடி மதிப்பிலான 78 நாட்களுக்கான உற்பத்தித் திறன் சார்ந்த கூடிய போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் துர்கா பூஜை / தசரா விடுமுறைக்கு முன்னதாகவே இந்த போனஸ் தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும், 11.40 லட்சம் கெஸட்டட் அங்கீகாரம் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்களுக்கான ஊதியத்திற்கு இணையான போனஸ் தொகை வழங்கப்படுகிறது. ரயில்வே துறையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் பணியாற்ற ஊழியர்களை ஊக்குவிப்பதற்கான உந்துசக்தியாக இந்தப் போனஸ் வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள ஒரு ரயில்வே ஊழியருக்கு, 78 நாட்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச போனஸ் தொகை ரூ.17,951 ஆகும். இத்தொகை, ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களான இருப்புப்பாதை பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் (கார்டுகள்), நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் இதர குரூப் சி ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
2025-26-ம் ஆண்டில், ரயில்வேயின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. ரயில்வே நிர்வாகம் சாதனை அளவாக, 1670 மில்லியன் டன் சரக்குகள் மற்றும் 7.41 பில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது.
—-
(Release ID: 2323256)
TV/SV/GS