தென்னை மரங்களுக்கும், உயர்ந்த குணங்கள் கொண்ட மனிதர்களுக்கும் இடையேயான ஒற்றுமையை சுட்டிக்காட்டி வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய நன்றி உணர்வையும், தன்னலமற்ற சேவையையும் விளக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;
“தென்னை மரம் தாம் தொடக்க காலத்தில் பெற்ற சிறிய அளவிலான நீரை வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்கிறது. தன் தலை மீது கனமான சுமையை ஏற்றிருந்தாலும் மனித சமூகத்திற்குத் தொடர்ந்து இனிப்புமிக்க நீரை வழங்குகிறது. அதேபோன்று உயர்ந்த குணங்கள் கொண்ட மனிதர்களும், குறிப்பாகத் தியாகம் செய்த சிறந்த ஆன்மாக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தாங்கள் பெற்ற உதவியை ஒருபோதும் மறப்பதில்லை. அவர்களுடைய தியாகம், தவமிக்க வாழ்க்கை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது பெரும் நன்றி உணர்வு கொண்ட அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அந்த லட்சியங்களுக்கேற்ப அமைக்கின்றனர். அத்துடன், தங்களுடைய செயல்கள், அர்ப்பணிப்பு மிக்க சேவை உணர்வு ஆகியவற்றின் மூலம் என்றும் நன்றியுடையவர்களாக உள்ளனர்”.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325652®=3&lang=1
***
SS/IR/SU/RJ
प्रथमवयसि पीतं तोयमल्पं स्मरन्तः शिरसि निहितभारा नारिकेला नराणाम्। ददति जलमनल्पास्वादमाजीवितान्तं न हि कृतमुपकारं साधवो विस्मरन्ति॥ https://t.co/A2CXAC9zrU
— Narendra Modi (@narendramodi) October 21, 2026