Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

திரு உம்மிடி எத்திராஜின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


திரு உம்மிடி எத்திராஜின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்ததற்காக திரு உம்மிடி எத்திராஜ் என்றும் நினைவுகூரப்படுவார் என்று அவர் கூறியுள்ளார்.

2023-ம் ஆண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அரசு அந்தச் செங்கோலுக்கு உரிய கௌரவத்தை அளித்த போது அவரை சந்தித்தது குறித்து நினைவுகூர்ந்தத் திரு மோடி, அவரது வாழ்க்கையும், கலைத்திறனும் இந்தியாவின் பெருமைமிக்க வளமான பாரம்பரியத்திற்கும், நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கும் இடையேயான போற்றத்தக்கத் தொடர்பை பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

“திரு உம்மிடி எத்திராஜ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்த இவர், முன்னாள் பிரதமர் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோலை வடிவமைத்தமைக்காக என்றும் நினைவுகூரப்படுவார். பல ஆண்டுகளுக்குப் பின்பு, 2023-ல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அந்த செங்கோலுக்கு உரிய கௌரவத்தை வழங்கி சிறப்பிக்கும் வாய்ப்பு எங்கள் அரசுக்கு கிடைத்தது. அப்போது திரு உம்மிடி எத்திராஜ் அவர்களை சந்தித்து, நமது நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நன்றி தெரிவிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அவரது வாழ்க்கையும், கலைத்திறனும், இந்தியாவின் பெருமைமிக்க வளமான பாரம்பரியத்திற்கும் நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கும் இடையிலான போற்றத்தக்க தொடர்பை பிரதிபலிக்கின்றன. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”  

***

(Release ID: 2325908)

SS/IR/SU/RJ