2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் எஃப்53 குண்டு எறிதல் பிரிவில் சிறப்பான செயல்பாட்டின் மூலம் தங்கம் வென்ற ஆயுஷ் வர்மாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குண்டு எறிதலில் தங்கம், ஈட்டி எறிதலில் வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று, ஆயுஷ் தமது முதல் ஆசிய பாரா விளையாட்டுப் பயணத்தை இரண்டு பதக்கங்களுடன் நிறைவு செய்வதைக் குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, இது திறமை, பன்முகத்தன்மை, உறுதி ஆகியவற்றின் அற்புதமான ஒரு வெளிப்பாடு என்று கூறியுள்ளார். அவரது எதிர்கால விளையாட்டுப் பயணத்திற்குத் தமது நல்வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் குண்டு எறிதல் எஃப்53 பிரிவில் தமது சிறப்பான செயல்பாட்டின் மூலம் தங்கம் வென்ற ஆயுஷ் வர்மாவுக்கு வாழ்த்துகள். குண்டு எறிதலில் தங்கம், ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்றதன் மூலம், தமது முதல் ஆசிய பாரா விளையாட்டுப் பயணத்தை இரண்டு பதக்கங்களுடன் ஆயுஷ் நிறைவு செய்கிறார். இது திறமை, பன்முகத்தன்மை, உறுதி ஆகியவற்றின் அற்புதமான ஒரு எடுத்துக்காட்டு. அவரது விளையாட்டுப் பயணத்திற்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”
(Release ID : 2326097)
****
TV/PLM/SH
Congrats to Ayush Verma for winning the Gold in the Men's Shot Put F53 event at the Asian Para Games 2026 with an excellent throw. With a Gold in Shot Put and a Bronze in Javelin Throw, Ayush concludes his debut Asian Para Games campaign with two medals. Truly a wonderful demonstration of talent, versatility and determination. Best wishes for the sporting journey ahead: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 21, 2026