Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டு தடகளப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தேஜல்பென் டமோருக்கு பிரதமர் வாழ்த்து


2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் டி12 தடகள பிரிவில், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற தேஜல்பென் டமோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

அவரது வேகம், மன உறுதி, சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதில் அர்ப்பணிப்பு ஆகியவை மிகவும் பாராட்டுக்குரியவை என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்தச் சாதனையைப் படைத்த அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

 

“தேஜல்பென் டாமோரின் மற்றுமொரு சிறப்பான செயல்பாடு !

 

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 400 மீட்டர் டி12 பிரிவில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

 

அவரது வேகம், மன உறுதி, சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதில் அர்ப்பணிப்பு ஆகியவை உண்மையிலேயே பாராட்டுக்குரியவை.

 

இந்தச் சாதனையைப் படைத்த தேஜல்பென்னுக்கு வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326790&reg=3&lang=1

****

TV/BR/SH