2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் ஒற்றையர் எஸ்எல்4 பிரிவில் தங்கம் வென்று, தனது முதல் போட்டியை மறக்க முடியாததாக மாற்றிய நவீன் சிவகுமாருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது சிறப்பான செயல்பாடு, நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு மோடி, நவீன் தொடர்ந்து புதிய மைல்கற்களை எட்டி, சக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் நவீன் சிவகுமாருக்கு ஒரு மறக்கமுடியாத அறிமுகப் போட்டி!
ஆடவர் ஒற்றையர் எஸ்எல்4 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். நவீனின் சிறப்பான செயல்பாடு நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. அவர் தொடர்ந்து புதிய மைல்கற்களை எட்டி, சக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்க வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327583®=3&lang=1
****
TV/BR/SH
A memorable debut for Naveen Sivakumar at the Asian Para Games! Congratulations on winning Gold in Men’s Singles SL4. His outstanding performance has brought glory to the nation. May he continue to achieve new milestones and inspire fellow athletes: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2026