ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், வில்வித்தையில், மகளிர் ‘ரிகர்வ் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் முதல் பதக்கத்தைப் பெற்று, வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற பாவ்னா சௌத்ரி – பூஜா ஜத்யன் இணைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
இவர்களது இந்த சாதனை, வில்வித்தையில் ஆர்வம் கொண்ட பலருக்கு ஊக்கமளிக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில்,பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், வில்வித்தையில், பாவ்னா சௌத்ரி – பூஜா ஜத்யன் இணை வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர்!
இப்போட்டியில், மகளிர் ரிகர்வ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்ற இருவருக்கும் வாழ்த்துகள். இவர்களது இந்த சாதனை, வில்வித்தையில் ஆர்வம் கொண்ட பலருக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர்”.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327554®=3&lang=1
(Release ID: 2327554)
****
TV/SV/SH
A historic Silver for Bhawna Choudhary and Pooja Jatyan at the Asian Para Games! Congratulations to the duo on winning India’s first-ever medal in Women’s Recurve Doubles at the Games. Their achievement will inspire many aspiring archers: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2026