Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, புதிய உலக சாதனை படைத்த சந்தீப் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து


2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய சந்தீப் குமார், ஆடவர் 400 மீட்டர் டி64 பிரிவில் புதிய உலகச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற 100-வது பதக்கம் என்ற சிறப்பையும் இந்த வெற்றி பெற்றிருப்பது, அதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.

 சந்தீப் குமாரின் செயல்பாடு நாட்டிற்கே பெருமை சேர்க்கும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதாக திரு மோடி  குறிப்பிட்டார். மேலும் அவர் தொடர்ந்து இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:  

“இந்திய பாரா தடகளத்திற்கு ஒரு பொன்னான தருணம்! ஆடவர் 400 மீட்டர் டி64 பிரிவில், புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற சந்தீப் குமாருக்கு வாழ்த்துகள். முதல்முறையாகக் காலம் இறங்கிய வீரரின் இந்த அபாரமான செயல்பாடு, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வென்ற 100-வது பதக்கம் என்பதால் இந்த வெற்றி இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. அவர் தொடர்ந்து நாட்டிற்குப் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327592&reg=3&lang=1

***

AD/RB/RJ