Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இரும்புப் பெட்டகம் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2039 – 40-ம் நிதியாண்டு வரை ரூ. 10,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இரும்புப் பெட்டகம் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் உலகளாவிய போட்டித்தன்மைமிக்க இரும்புப் பெட்டக உற்பத்தி சூழலை உருவாக்குதல், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்தல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய உற்பத்தி வசதிகளை ஏற்படுத்துவதற்கும், தற்போதுள்ள இரும்புப் பெட்டக உற்பத்திப் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும் இத்திட்டம் ஆதரவளிக்கும். இந்த இரும்புப் பெட்டக உற்பத்தித் திட்டம் குறித்து 2026 – 27-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

புதிய இரும்புப் பெட்டக உற்பத்தி நிறுவனங்களை அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ள உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கும் இரும்புப் பெட்டக உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியம் அளிக்கப்படும். இதற்காக ரூ.859 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கப்பல் போக்குவரத்து தர நிலைகளின்படி உற்பத்தி செய்யப்பட்டு தகுதியுடைய இரும்புப் பெட்டக உற்பத்தியாளர்களால் விற்பனை செய்யப்படும் அனைத்து இரும்புப் பெட்டகத்திற்கும் செயல்பாட்டு செலவின உறுதி வழங்கப்படும். இதற்காக ரூ.8,891 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது உற்பத்தி செலவினங்களுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்புப் பெட்டகங்களுக்கான போட்டித்தன்மையை மேம்படுத்த உதவும்.

பரிசோதனை வசதி, சான்றளித்தல் வசதிகள் அமைப்பதற்கு நிதியுதவி அளிக்க ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், உள்நாட்டு இரும்புப் பெட்டக உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 10 மடங்கு அதிகரிக்கும். நேரடியாக 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329476&reg=3&lang=1

***

SS/IR/LDN/GS