கேலோ இந்தியா விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தித் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டம் 2026 முதல் 2033 – 34-ம் நிதியாண்டு வரை ரூ.1,856.67 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. உலகளாவிய விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தித் துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவதையும், அதற்கான முதலீடு, உற்பத்தி, புதுமைக் கண்டுபிடிப்பு, ஏற்றுமதி ஆகியவற்றை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2026 – 27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், முதலீடு, தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, தரச்சான்றிதழ், சந்தை மேம்பாடு ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதன் மூலம் நாட்டின் விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தித் தளத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் உலகளாவிய போட்டித்தன்மைமிக்க விளையாட்டு உபகரணங்கள் தொழில்துறை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதோடு உலகளவில் இந்தியாவின் நிலையையும் வலுப்படுத்தும்.
கேலோ பாரத் நிதி 2025, மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா ஆகியவற்றின் தொலைநோக்குப் பார்வையிலும் இணைந்துள்ள இத்திட்டம், முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உள்நாட்டு உற்பத்தித் திறன்களை வலுப்படுத்தவும், விளையாட்டு உபகரணங்களின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், பரிசோதனை வசதிகள், வடிவமைப்பு மையங்கள், அதுசார்ந்த தொழில்துறை நிறுவனங்களை ஒரே இடத்தில் அமைப்பதன் மூலம், தொகுப்பு அடிப்படையிலான உற்பத்தியை ஊக்குவிக்கவும், ஒருங்கிணைந்த தொழில்துறை சூழலை உருவாக்கவும் விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி மண்டலங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329481®=3&lang=1
***
SS/IR/LDN/GS