Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்தியப் பிரதேச மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேச மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


மத்திய பிரதேச மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேச மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (01.11.2026) வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம், புகழ்பெற்ற பாரம்பரியம், வளமான கலாச்சாரம், பிரமிக்க வைக்கும் இயற்கை அழகு ஆகியவற்றைக் கொண்ட பூமி என்றும், அதன் உலகப் புகழ்பெற்ற பாரம்பரியத் தலங்கள் மாநிலத்தின் வரலாற்று அடையாளத்தை மேலும் செழுமைப்படுத்துகின்றன என்றும் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேச மக்கள் தங்களது திறமை, தொழில்முனைவுத் திறன் ஆகியவை மூலம் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். விவசாயம், தொழில், சுற்றுலா, கல்வி, உள்கட்டமைப்பு முதல் புத்தாக்கம் வரை, இந்த மாநிலம் புதிய மைல்கற்களை எட்டி வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331090&reg=3&lang=1

***

SK/PLM/PD