உத்தராகண்ட் நிறுவன தினத்தையொட்டி, அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.
தேவ பூமியான உத்தராகண்ட் ஆன்மீக பாரம்பரியத்துடனும், சிறந்த இயற்கை அழகுடனும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். கண்ணைக்கவரும் மலைப்பகுதிகள், புனித நதிகள், போற்றக்கூடிய புனிதத் தலங்கள், மகத்துவம் மிக்க கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவை அம்மாநிலத்தின் சிறப்பு வாய்ந்தவை என்றும் அவர் தெரிவித்தார்.
கடினமாக உழைக்கக்கூடிய, திறமைமிக்க, முற்போக்கு சிந்தனையுடைய மாநில மக்களின் தீவிர பங்களிப்புடன் உத்தராகண்ட் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியின் உச்சத்தை எட்டுவதாக திரு மோடி கூறினார். அம்மாநிலம் தொடர்ந்து விரைவான முன்னேற்றத்தை அடையும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், அம்மாநில மக்களிடையே மகிழ்ச்சி, அமைதி, செழுமை ஆகியவை பெருகட்டும் என்று வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334234®=3&lang=1
***
SS/IR/LDN/SU
उत्तराखंड स्थापना दिवस के अवसर पर राज्य के सभी निवासियों को मेरी हार्दिक शुभकामनाएं। हमारी यह देवभूमि आध्यात्मिक चेतना और अद्भुत प्राकृतिक सौंदर्य से समृद्ध है। मनोरम पर्वतीय परिदृश्यों, पवित्र नदियों और पावन चारधाम के साथ-साथ यह प्रदेश अपनी गौरवशाली सांस्कृतिक विरासत के लिए भी विशिष्ट पहचान रखता है। राज्य के परिश्रमी, प्रतिभाशाली और प्रगतिशील लोगों की सक्रिय भागीदारी से उत्तराखंड आज हर क्षेत्र में विकास की नई ऊंचाइयों को छू रहा है। मुझे विश्वास है कि प्रकृति एवं संस्कृति प्रेमियों का यह प्रदेश प्रगति के पथ पर निरंतर तेज गति से आगे बढ़ता रहेगा। यह विशेष अवसर राज्य के सभी लोगों के जीवन में सुख, शांति एवं समृद्धि लेकर आए।
— Narendra Modi (@narendramodi) November 9, 2026