Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கோவர்தன் பூஜையையொட்டி பிரதமர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்


கோவர்தன் பூஜை நிகழ்வையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அனைவரும் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செழுமை ஆகியவற்றுடன்  வாழ வேண்டும் என்று  வாழ்த்தியுள்ள அவர், இந்த புனிதமிக்க விழா அனைவரது வாழ்விலும் புதிய சக்தியையும், உற்சாகத்தையும் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கும் சமஸ்கிருத நீதிமொழியையும் அவர் பகிர்ந்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

கோவர்தனை உயர்த்துபவரும், பிராஜ் மக்களின் அன்பை பெற்றவரும், வீரத்தில் அசைக்க முடியாதவரும் தமது பக்தர்களின் அச்சத்தை களைபவருமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நான் வணங்குகிறேன்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334499&reg=3&lang=1

***

SS/IR/PS/GS