மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று (15.11.2026) பங்கேற்றார். சுமார் ₹3,000 கோடி மதிப்பிலான 246 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பகவான் பிர்சா முண்டாவின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பழங்குடியின மக்களின் வளமான பாரம்பரியம், கலாச்சாரம், நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுவதே பழங்குடியினர் கௌரவ தினத்தின் நோக்கம் என்று அவர் கூறினார். பழங்குடியின வீரர்களின் தியாகங்களை நாடு நினைவுகூர்வது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2021 நவம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்ட பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டம் இப்போது தேசியத் திருவிழாவாக மாறியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். கடந்த ஆண்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளின்போது 2 லட்சத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடைபெற்றதாகவும், கோடிக்கணக்கான மக்கள் பங்கேற்றதாகவும் அவர் கூறினார்.
ஆங்கிலேயர்களின் அநீதிக்கு எதிராகப் பழங்குடியின மக்கள் தொடர்ந்து போராடியதாகப் பிரதமர் குறிப்பிட்டார். காசி மலைப்பகுதியில் திரோத் சிங்கின் போராட்டம், சோட்டா நாக்பூரின் கோல் இயக்கம், சிதோ-கானு தலைமையிலான சந்தால் புரட்சி, மங்கரில் கோவிந்த் குருவின் ஆதரவாளர்களின் தியாகம் ஆகியவற்றை அவர் நினைவுகூர்ந்தார். ராணி கைதிலியு, தந்தியா பில், அல்லூரி சீதாராம ராஜு, ராணி துர்காவதி ஆகியோரின் வீரத்தையும் அவர் குறிப்பிட்டார். பகவான் பிர்சா முண்டாவின் உல்குலான் போராட்டம் இன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக உள்ளது என்று பிரதமர் கூறினார்.
நாடு முழுவதும் 170-க்கும் அதிகமான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், 70-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதிகள், பழங்குடியினரின் தயாரிப்புப் பொருட்களுக்கான விற்பனை மையங்கள், கிராமப்புற உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
இந்தியாவின் இரண்டு முக்கிய சாதனைகள் குறித்து நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருவதாகப் பிரதமர் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் சுமார் 50 கோடி மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீண்டிருப்பது முதல் சாதனை என்றும், நக்சலிசம், மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து நாடு முழுமையாக விடுபட்டிருப்பது இரண்டாவது சாதனை என்றும் அவர் கூறினார். இந்த இரண்டு சாதனைகளும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையவை என்று அவர் தெரிவித்தார். உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, சுமார் 50 கோடி இந்தியர்கள் தீவிர வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் எனவும் இது சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா அடைந்துள்ள மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என்றும் அவர் கூறினார். அரசின் முயற்சிகள் மட்டுமின்றி, சமூகத்தின் கூட்டு வலிமையும் ஒவ்வொரு குடிமகனின் கடின உழைப்புமே இதற்குக் காரணம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பல ஆண்டுகளாக வளர்ச்சியில் பின்தங்கியிருந்த பழங்குடியின பகுதிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளதாகப் பிரதமர் கூறினார். பிரதமரின் ஜன்மன் திட்டம், தர்த்தி ஆபா (நிலத்தின் தந்தை) பழங்குடியினர் கிராம மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கு ₹1 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொலைதூரப் பழங்குடியின பகுதிகளிலும் மருத்துவ வசதிகளை வழங்க ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
ஏழைக் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டதால் பல்வேறு நோய்களின் பாதிப்பு குறைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். வறுமையை ஒழிக்க ஏழைக் குடும்பங்களின் வருமான வாய்ப்புகளை அதிகரிப்பது அவசியம் என்று அவர் கூறினார். இதற்காக முத்ரா திட்டத்தின் கீழ் பிணையில்லாக் கடன்கள் வழங்கப்பட்டு, ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவர்களுக்குப் புதிய தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
வளர்ச்சியில் பின்தங்கிய 100-க்கும் அதிகமான மாவட்டங்கள், 500-க்கும் அதிகமான வட்டாரங்களில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகப் பிரதமர் கூறினார்.
நக்சலிசத்தால் முன்பு சுமார் 125 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான வன்முறைச் சம்பவங்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். குறிப்பாகப் பழங்குடியின மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார். இன்று நக்சலிசம் முடிவுக்கு வந்துள்ளதால், அப்பகுதிகளில் தாய்மார்களும் சகோதரிகளும் நிம்மதியடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு சத்தீஸ்கரின் பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் தாம் தீபாவளி கொண்டாடியதைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். கட்சிரோலி உள்ளிட்ட முன்னாள் நக்சல் பாதிப்புப் பகுதிகளில் இன்று தீப ஒளியுடன் நம்பிக்கையின் ஒளியும் பரவியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பழங்குடியின மக்கள் இந்தியாவின் முன்னேற்றத்தில் உற்சாகமாகப் பங்களித்து வருவதாகப் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். நாட்டின் உயரிய குடியரசுத் தலைவர் பதவியைப் பழங்குடியினத்தைச் சேர்ந்த திருமதி திரௌபதி முர்மு வகிப்பது அனைவருக்கும் பெருமை அளிக்கிறது என்று அவர் கூறினார்.
பகவான் பிர்சா முண்டாவின் வாழ்க்கையிலிருந்து அனைவரும் ஊக்கம் பெற்று, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளில் மேலும் அதிகமாகப் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2336495®=3&lang=1
****
TV/PLM/RJ
Janjatiya Gaurav Diwas celebrates the rich heritage, culture and contributions of India's tribal communities. https://t.co/jaafdnMJ6n
— Narendra Modi (@narendramodi) November 15, 2026
15 नवंबर 2021 से जनजातीय गौरव दिवस मनाने की जो शुरुआत हुई, आज वो एक राष्ट्रीय उत्सव बन चुका है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 15, 2026
एक समय था, जब हमारे देश में अनेक दिवस और उत्सव विदेशी दृष्टिकोण से तय होते थे। लेकिन आज भारत अपनी विरासत को, अपने इतिहास को, अपने नायकों को स्वदेशी स्वाभिमान के साथ याद कर रहा है। ये हमारी राष्ट्रीय चेतना में आए एक बड़े परिवर्तन का प्रतीक है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 15, 2026
देश की दो बड़ी उपलब्धियों की चर्चा हर जगह हो रही है। पहली उपलब्धि है देश के करीब 50 करोड़ लोगों की भीषण गरीबी को परास्त करना। और दूसरी उपलब्धि है, देश का नक्सलवाद...माओवादी आतंक से मुक्ति पाना: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 15, 2026
हमने उन क्षेत्रों पर भी विशेष ध्यान दिया, जो लंबे समय तक विकास में पीछे रह गए थे। देश के 100 से अधिक आकांक्षी जिलों और 500 से अधिक आकांक्षी ब्लॉकों में विशेष अभियान चलाया। इनमें बड़ी संख्या में जनजातीय आबादी वाले क्षेत्र शामिल हैं। अब पीएम कृषि धन धान्य योजना के तहत कृषि के क्षेत्र में पिछड़े 100 जिलों पर भी विशेष ध्यान दिया जा रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 15, 2026