Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெனிஸ் கலைக் கண்காட்சியில், சிறந்த தேசிய அரங்குக்கான மதிப்புமிக்க ‘விசிட்டர்ஸ் லயன்’ விருதை இந்திய அரங்கு வென்றதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்


வெனிஸ் கலைக் கண்காட்சியில், சிறந்த தேசிய அரங்குக்கான மதிப்புமிக்க ‘விசிட்டர்ஸ் லயன்‘ விருதை இந்திய அரங்கு வென்றதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் கலை, கலாச்சார உலகிற்கு ஒரு பெருமைக்குரிய தருணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“இந்தியாவின் கலை, கலாச்சார உலகிற்கு ஒரு பெருமைமிக்க தருணம்! வெனிஸ் கலைக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய அரங்கம், சிறந்த தேசிய அரங்கிற்கான மதிப்புமிக்க ‘விசிட்டர்ஸ் லயன்’  விருதை வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

நமது கலைஞர்கள், இந்தியாவின் வளமான, பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்று, கலை உலகிற்குப் புதிய தோற்றத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இன்னும் பல இளம் இந்தியர்கள் கலைத்துறையில் ஈடுபடவும், புதிய படைப்பாற்றல் தளங்களை ஆராயவும் இந்தச் சாதனை அவர்களை ஊக்குவிக்கட்டும்.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2341518&reg=3&lang=1

****

SK/BR/SH