Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசியலமைப்பு தினத்தையொட்டி பாபாசாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்குப் பிரதமர் மரியாதை


அரசியலமைப்பு தினத்தையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்தார். பாபாசாகேப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர், அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினர்களாக இருந்த அனைத்துப் தலைவர்களுக்கும் பிரதமர் மரியாதை செலுத்தினார். அவர்கள் வழங்கிய அரசியலமைப்புச் சட்டம் இந்திய ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியம் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நோக்கத்தை நிறைவேற்றுவதில் நாட்டிற்கு அது தொடர்ந்து வழிகாட்டும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தினார். அறிஞர்களால் ஆழமாக விவாதிக்கப்பட்டு, நன்கு வரையறுக்கப்பட்ட கொள்கைகளும், கோட்பாடுகளும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதைப் பிரதிபலிக்கும் சமஸ்கிருத நீதிமொழியையும் பிரதமர் பகிர்ந்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும், அதன் மாண்புகளை வலுப்படுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் தருணமாகவும் விளங்கும் அரசியலமைப்பு தினத்தில் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341703&reg=3&lang=1&_gl=1

***

SS/PD/PS