உத்தராகண்ட் மாநிலம், பௌரி கர்வால் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு அவர் தமது ஆறுதலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உத்தராகண்ட் மாநிலத்தின் பவுரி கர்வால் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி.”
****
(Release ID: 2343076)
SK/PLM/RJ
Deeply disturbed to learn about the loss of lives in a mishap in Pauri Garhwal district of Uttarakhand. I extend my condolences to those who have lost their loved ones. Praying for the speedy recovery of the injured. An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each of those who lost their lives. The injured would be given Rs. 50,000: PM @narendramodi
— PMO India (@PMOIndia) November 28, 2026