பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் வியட்நாம் இடையே, இணைய பாதுகாப்பு தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது. இந்திய கணிணி அவசர பாதுகாப்புக் குழு மற்றும் பொது பாதுகாப்பு, இணைய பாதுகாப்புத் துறை, வியட்நாம் இடையே 3 செப்டம்பர் 2016 அன்று ஹானோய் நகரில் கையெழுத்தானது.
இணைய குற்றங்களை கண்டுபிடிப்பது, தடுப்பது, தீர்வு காண்பது ஆகிய துறைகளில் இரு நாடுகளிடையே நெருக்கமான ஒத்துழைப்பு ஏற்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.
இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதால், இரு தரப்புக்கும் இணைய பாதுகாப்புத் துறையில் இந்தியா மற்றும் வியட்நாமுக்கு பெரும் பலன் ஏற்படும்.
p>