Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரதப் பிரதமர் குஜராத் மாநிலம் பாஜிபுராவில் கால்நடைத் தீவன உற்பத்திப் பிரிவு, பாசன வசதி, குடிநீர் விநியோகம் ஆகிய திட்டங்களைத் திறந்து வைத்தார்

பாரதப் பிரதமர் குஜராத் மாநிலம் பாஜிபுராவில் கால்நடைத் தீவன உற்பத்திப் பிரிவு, பாசன வசதி, குடிநீர் விநியோகம் ஆகிய திட்டங்களைத் திறந்து வைத்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 17, 2017) தெற்கு குஜராத் பாஜிபுரா நகரில் அமைந்துள்ள சூரத் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (SUMUL) கால்நடைத் தீவனப் பிரிவைத் திறந்துவைத்தார். அத்துடன், மோட்டார் நீர்ப்பாசனத்துக்கான மூன்று திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். வியாரா நகருக்கும் தப்பி மாவட்ட்டத்தின் ஜேசின்பூர்-டோல்வன் குழுமத்துக்கும் குடிநீர் விநியோகத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்களிடையில் உரையாற்றிய பிரதம மந்திரி, அப்பகுதியில் நீண்டகாலம் உழைத்த காலங்களை நினைவு கூர்ந்தார். சூரத் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் அப்பகுதியில் ஏராளமானோரை வாழ்வித்ததைக் குறிப்பிட்டார். ஊம்பெர்கான் முதல் அம்பாஜி வரையிலான பகுதிகள் முற்றிலுமாக மாறிவிட்டன இதனால், குஜராத் மாநிலத்தின் பழங்குடி மக்களுக்குப் பெரும் பலன் கிடைத்தது என்றார். கூட்டுறவும் அரசும் இணைந்து பாடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை சூரத் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்தில் பார்க்கிறோம். மேலும், பால் உற்பத்தியாளர்களும் பால் பண்ணைகளும் நெருங்கிப் பணியாற்றும்போது, நல்ல பலன்கள் கிட்டும் என்பதை சூரத் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் நமக்குக் காட்டுகிறது என்று பிரதமர் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் உருவான புதிய மாவட்டங்களில் தப்பி மாவட்டமும் ஒன்று என்று கூறிய பிரதமர், இந்த மாவட்டம் மகத்தான மேம்பாட்டை அடைவது மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

வேளாண் துறையில் மதிப்புக் கூட்டு தேவைப்படுகிறது. நாட்டில் பால் உற்பத்தி வீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

***