Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்துக்காக 2360 கோடி பத்திரங்களை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்துக்காக 2360 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை உருவாக்க ஒப்புதல் அளித்தது.

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் மற்றும், இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் 2017-18 நிதியாண்டில் இந்த பத்திரங்கள் உருவாக்கப்படும். இந்த பத்திரங்களின் மூலம் வரும் நிதி புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகத்தால் சூரிய ஒளி பூங்கா, பசுமை எரிசக்தி பாதைகள், காற்றாலை மின்சாரத்துக்கு ஊக்கமளிப்பது, மத்திய அரசு பொதுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள், சூரிய ஒளி திட்டங்களுக்கான நிதி, வீட்டு மாடியில் உருவாக்கப்படும் சூரிய ஒளி மின் திட்டங்கள், பரவலாக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் முதலீடு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும். இது போன்ற முதலீடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் உட்கட்டுமானத்தை அதிகரிக்கவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான இலக்குகளை அடையவும் இது உதவும். புதுப்பிக்கத்தக்க எரிசகத்தி உற்பத்தியில் கூடுதல் திறனை உருவாக்கவும், இத்துறையில் கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்கவும் இந்த நிதி பயன்படும்.

பின்னணி :

2016-17 நிதியாண்டில் NHAI, PFC, REC, IREDA மற்றும் IWAI ஆகிய நிறுவனங்களின் மூலமாக 31,300 கோடி கூடுதல் நிதி சேகரிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக 2016-17ம் நிதியாண்டில், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகத்துக்காக 4000 கோடி நிதியை பத்திரங்கள் மூலம் உருவாக்க IREDA அமைப்புக்கு அரசு அனுமதியளித்து ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த ஒதுக்கீட்டில் IREDA அமைப்பு 1640 கோடி உருவாக்கியிருந்தது. மீதம் உள்ள 2360 கோடி ரூபாய் தேவை குறித்து எரிசக்தித் துறை அமைச்சகம் அரசை அணுகியதைத் தொடர்ந்து தற்போது இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.