Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய அளவில் “தூய்மை இந்தியா” விழிப்புணர்வு


s2015031663210 [ PM India 181KB ]

“தூய்மை இந்தியா” திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் திரு. அபிஷேக் குமார் ஷர்மா தேசிய அளவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் இந்த பயணத்தை மேற்கொள்ள என்னை ஊக்குவித்தது. தூய்மை இந்தியா திட்டத்திற்காக நான் ஆண்டு முழுவதையும் அற்பணிக்க உள்ளேன். இது வரை 4500 கி.மீட்டர் பயணம் செய்து, 5000 கிராமங்கள், 350 புறநகரங்கள் உட்பட எட்டு மாநிலங்களில் உள்ள மக்களிடம் தூய்மை குறித்து பேசி வருகிறேன் என்று அபிஷேக் தெரிவித்தார். அபிஷேக்கின் இந்த சிறந்த முயற்சியை பாராட்டிய பிரதமர், அவருடைய வருங்காலத்திற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.