Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவை மாநிலங்களவையில் வரவேற்று பிரதமர் உரை


நாடாளுமன்றத்தின் மாநிலங்களையின் தலைவராக குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடுவை வரவேற்று அவை உறுப்பினர்கள் பேசினார்கள். பிரதமர் திரு. நரேந்திர மோடியும் உறுப்பினர்களுடன் சேர்ந்து குடியரசுத் துணைத் தலைவரை வரவேற்றார்.

நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது இன்றைய தினம் திரு. குதிராம் போஸ் என்ற இளம் புரட்சியாளரை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட நாள் என்று குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதலாவது குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு என்றும் பிரதமர் குறிப்பிட்டார். திரு. நாயுடு அவர்களுக்கு நீண்ட அனுபவம் இருக்கிறது என்றும் நாடாளுமன்ற நடைமுறைகளின் நுட்பங்களை நன்கு அறிந்தவர் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

திரு. வெங்கையா நாயுடு அவர்களுடனான தனது நீண்ட உறவை நினைவு கூர்ந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஊரக பகுதிகளின் தேவைகளையும், ஏழைகள் மற்றும் விவசாயிகள் தேவைகளை நன்கு அறிந்தவர். இப்பிரச்சினைகளில் அவரது கருத்துகள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்தன என்றார்.

எளிமையான, ஊரக பின்னணியுடன் வரும் மக்கள், இந்தியாவில் உயரிய பதவிகளை அலங்கரிப்பது, இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியையும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பலத்தையும் காட்டுகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.