Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும், அமெரிக்க அதிபர் ஓபாமாவும் நடத்திய கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும், அமெரிக்க அதிபர் ஓபாமாவும் நடத்திய கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும், அமெரிக்க அதிபர் ஓபாமாவும் நடத்திய கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும், அமெரிக்க அதிபர் ஓபாமாவும் நடத்திய கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும், அமெரிக்க அதிபர் ஓபாமாவும் நடத்திய கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும், அமெரிக்க அதிபர் ஓபாமாவும் நடத்திய கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும், அமெரிக்க அதிபர் ஓபாமாவும் நடத்திய கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களும், அமெரிக்க அதிபர் ஓபாமாவும் நடத்திய கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு


அதிபர் திரு ஓபாமா அவர்களே,

ஊடகத்துறை நண்பர்களே,

நியூயார்க் நகரில் அதிபர் ஓபாமா அவர்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததற்கு நன்றி. இரு நாடுகளிக்கிடையே ஏற்பட்டுள்ள நட்பு, இந்த நட்பு உறுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது .

சர்வதேச ஒத்துழைப்பிலும், இரு நாட்டு உறவிலும் நல்ல முன்னேற்றம் ஏற்ட்டுள்ளது. கடந்த வாரம் நான் சிலிக்கான் பள்ளதாக்கில் இருந்தேன். அமெரிக்காவின் வெற்றியை உறுதி செய்த அவர்களது புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்களையும் காண முடிந்தது. இளைஞர்கள், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவையே இந்திய அமெரிக்கர்களிடையே இயற்கையாக ஏற்பட்ட உறவுக்கான காரணம்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு முக்கிய பங்கு வகிப்பதை எனது கலிபோர்னியா விஜயம் உறுதி செய்தது. உலகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை கருதுகையில், நமது கூட்டணி நமக்கும் உலக நாடுகளுக்கும் பெரும் முக்கியத்துவத்தை அளித்தள்ளது.

இயற்கையை பாதுகாப்பதற்கும், தட்பவெட்ப மாற்றத்தை எதிர் கொள்வதற்கும், வளர்ச்சியை அடைவதற்கும், தொழில்நுட்பம் பெரிய வகையில் உதவுகிறது. தட்பவெட்ப மாற்றத்தை தடுப்பதில் நானும் அமெரிக்க அதிபரும் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் மனித குலத்தின் வளர்ச்சியும் இதில் அடங்கி உள்ளது என்பதை அறிவோம். நாங்கள் இருவரும், உயர்ந்த தேசிய இலக்குகளை வைத்துள்ளோம்.

2022ம் ஆண்டுக்குள் 175 ஜிகா வாட் மறுசுழற்சி எரிசக்தியை தயாரிப்பது மட்டும் எங்கள் நோக்கமல்ல. பல்வேறு எரிசக்தி முறைகளையும் சேர்த்து உருவாக்குவதே எங்கள் நோக்கம். இந்த பூமியின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து, எங்கள் பின்னணி மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படையில், எடுக்கப்படும் முயற்சியாகும்.

நமது அசாதாரணமான இந்த உறவு எரிசக்தி துறையில் சுத்தமான மற்றும் மறுசுழற்சி எரிசக்தியை திறம்பட தயாரிக்க உதவும். உலகெங்கும் சுத்தமான மறுசுழற்சி எரிசக்தியை விரைவாக தயாரிக்க வேண்டும் எனும் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அதிபர் ஓபாமாவுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன். இந்த இலக்கை அடைய நாம் இணைந்து பணியாற்ற வேண்டும். மேலும் இதற்கான தேவை உள்ளவர்களுக்கு இத்திட்டம் சென்று சேர வேண்டும் என்பதை நோக்கி நாம் உழைப்பதும் அவசியம்.

சிறிய தீவு நாடுகளுக்கும், சிறு நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும், தட்பவெட்ப மாறுதல் தொடர்பாக நிதியும் தொழில்நுட்பமும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிக்க பாரீஸில் நடைபெற உள்ள மாநாடு உதவும் என்று நம்புகிறேன்.

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில், இந்தியாவுக்கு நிரந்தர இடம் ஒதுக்குவதை ஆதரித்த அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்தக் கொள்கிறேன். மேலும் அந்த பாதுகாப்புக் குழுவை சீரமைக்க அமெரிக்காவின் உதவியையும் கோரியுள்ளேன்.

இதே போல ஏற்றுமதி கட்டுப்பாட்டுக் குழுவிலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள், இந்தியாவை உறுப்பினராக்க அமெரிக்காவின் ஆதரவு வரவேற்கத்தக்கது. பாதுகாப்பு குறித்த பல்வேறு விவகாரங்களை நம் இரு நாடுகளும் சேர்ந்து எதிர்கொண்டு வருகின்றன.

நம் இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்பும் விரிவாகிக் கொண்டிருக்கிறது. தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் பல்வேறு வகைகளில் வளர்ந்து கொண்டிருக்கையில், இதற்கு எதிரான நமது கூட்டுறவு மேலும் வலுவடைய வேண்டும். இணைய பாதுகாப்பு குறித்து சமீபத்தில்தான் ஒரு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். ஆப்கானிஸ்தான் மக்கள் தீவிரவாதத்தை விட்டொழித்து ஒரு அமைதியான வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நம் இரு நாடுகளும் சேர்ந்து ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளோம்.

ஆசியா, பசிபிக், ஜப்பான் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிக்கான நமது தொலைநோக்குத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்கிறேன். இது நமது கடல்சார் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தும். நாம் தொடர்ந்து இது போல பணியாற்ற ஏதுவாக, ஆசிய பசிபிக் தொழில் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக்கப் பட வேண்டும். நமது உறவை உறுதிப்படுத்துவதில், பொருளாதார கூட்டுறவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நியுயார்கிலும், சான் ஜோஸிலும் தொழில் முனைவோரோடு ஒரு சிறந்த சந்திப்பை நடத்தி முடித்திருக்கிறேன். அவர்கள் இந்தியா மீது வைத்துள்ள நம்பிக்கை அவர்கள் அளிக்கும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் ஆரோக்கியமானவையாக இருக்கிறது.

இரு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிக்கவும், இருநாட்டு முதலீடு ஒப்பந்தத்தை நிறைவேற்றவும், நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

இந்த கூட்டமும், அமெரிக்காவில் எனது சந்திப்புகளும், நமது உறவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. இன்றைய கூட்டம், மிகவும் பயனுள்ளதாகவும், நமது அவசரமான தேவைகள் குறித்து விவாதிக்கவும் ஏற்றதாக இருந்தது.

நன்றி.

•••••