Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா குவைத் இடையே இரட்டை வரி விதிப்பு முறையை தடுப்பு வருமான வரி தொடர்பான நிதி ஏய்ப்பை கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் திருத்தம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு இன்று புதுதில்லியில் கூடியது. இக்குழு இந்தியா குவைத் இடையே இரட்டை வரி விதிப்பு முறையை தடுக்கவும் வருமானம் வரி தொடர்பான நிதி ஏய்ப்பை கட்டுப்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி சர்வதேச தரத்திற்கு ஏற்ப நிதி செலாவணி தகவல்களை குறிப்பாக வரி தொடர்பான வங்கித் தகவல்கள் மற்றும் உள்நாட்டு வட்டி மீதான வரி குறித்த தகவல்களை செயல்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வகை செய்யும். மேலும், குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் குவைத் நாட்டில் அதிகாரம் அமைப்புகளின் ஒப்புதலுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் அதேபோல குவைத் நாட்டு மக்கள் இந்தியாவில் உள்ள தகவல்களை பெறவும் இந்த ஒப்பந்த்ததில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா குவைத் இடையே இரட்டை வரி விதிப்பு ஏய்ப்பை தவிர்பதற்கான ஒப்பந்தம் 2006ம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

*****