Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகளை உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்களின் (ஜிடிஎஸ்) ஊதியம் மற்றும் படிகளை உயர்த்தும் திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான  மத்திய அமைச்சரவை இன்று (06.06.2018)  ஒப்புதல் அளித்தது.

இந்த ஊதிய உயர்வு காரணமாக 2018-19-ஆம் ஆண்டில் அரசுக்கு ரூ.1257.75 கோடி கூடுதல் (ஒரே முறையான செலவினும் ரூ.860.95 கோடி, ஆண்டுதோறும் செய்ய வேண்டிய செலவினம் ரூ.396.80 கோடி)  செலவு பிடிக்கும்.

இந்த ஊதிய உயர்வு காரணமாக 3.07 லட்சம் கிராம அஞ்சல் பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.

விவரம் :

  1. காலம் தொடரும் படிகள் அமைப்பு மற்றும் ஊதிய அளவுகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. மொத்த ஜிடிஎஸ்ஸூம் இதற்கென கிளை போஸ்ட்மாஸ்டர்கள் மற்றும் உதவி கிளை போஸ்ட்மாஸ்டர்கள் என 2-ஆக பிரிக்கப்படும்.
  2. தற்போதைய காலம் தொடர்பான தொடர் படிகளின் 11 பிரிவுகள் இணைக்கப்பட்டு 3-ஆக இரண்டு நிலைகளில் ஒன்று கிளை போஸ்ட் மாஸ்டர்களுக்கும் மற்றொன்று உதவிக்கிளை போஸ்ட் மாஸ்டருக்கும் என அமைக்கப்படும்.
  1. புதிய காலம் தொடர்பான தொடர்படிகள் அறிமுகம் கீழ்கண்டவாறு அமையும்.

வரிசை

 

இனம்

 

4 மணி நேரம் / நிலை 1-க்கான குறைந்தபட்ச கால தொடர்பு படிகள்

 

5 மணி நேரம் / நிலை 2-க்கான குறைந்தபட்ச கால தொடர்பு படிகள்

 

1

 

கிளை போஸ்ட் மாஸ்டர்

 

Rs. 12000/-

 

Rs. 14500/-

 

2

 

உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர்

 

Rs. 10000/-

 

Rs. 12000/-

 

பணி நேரம் / நிலைகள் அடிப்படையில் ஜிஎஸ்டிகளுக்கு வழங்கப்படவுள்ள 2 வகை குறைந்தபட்ச கால தொடர்பு படிகள்

 

  1. Dearness Allowance will continue to be paid as a separate component, and also revised from time to time whenever it is revised for Central Government Servants.
  2. அகவிலைப்படி தனியாக தொடர்ந்து வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றி அமைக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கும் மாற்றி அமைத்து வழங்கப்படும்.
  3. கருணை அடிப்படையில் வழங்கப்படும் போனஸ் கணக்கீட்டிற்கு உச்சவரம்பான ரூ.7 ஆயிரத்தை அடிப்படை ஊதியமாகவும், அதனுடன் அகவிலைப்படியை இணைத்தும் செய்யப்படும் புதிய திட்டம் உருவாக்கப்படும் வரை இது தொடரும்.
  4. 1.1.2016 முதல் புதிய ஊதியம் அமலாக்கப்படும் வரையிலான நிலுவைத்தொகை அந்த காலத்திற்குரிய அடிப்படை ஊதியத்தை 2.57 என்ற காரணியால் பெருக்கி நிர்ணயிக்கப்பட்டு நிலுவைத்தொகை ஒரே தவணையில் வழங்கப்படும்.

vii. ஆண்டு ஊதிய உயர்வு 3 சதவீதம் என கணக்கிடப்படும் சம்பந்தப்பட்ட ஜிடிஎஸ் எழுத்துமூலமான வேண்டுகோளின்படி ஊதிய உயர்வு ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதி அல்லது ஜூலை முதல் தேதி வழங்கப்படும்.

viii. புதிதாக கடினம் மற்றும் ஆபத்து படி ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது. இதரபடிகளான அலுவலகப் பராமரிப்புப் படி,  ஒருங்கிணைந்த பணிப்படி, ரொக்கம் கொண்டு செல்லுதல் கட்டணம், சைக்கிள் பராமரிப்புப் படி, படகு படி, நிர்ணயிக்கப்பட்ட சட்டப்படியான கட்டணங்கள் ஆகியனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அமலாக்க அணுகுமுறை மற்றும் இலக்குகள் :

கிராமப்பகுதிகளில் திறன் மிக்க குறைந்த செலவிலான அடிப்படை அஞ்சல் வசதிகளை கிடைக்கச் செய்யும் வகையில் கிராம அஞ்சல் பணியாளர்களின் ஊதியம், படிகள் ஓய்வுப்பலன்கள் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்ட ஊதியம் காரணமாக இவர்களது  சமூகப் பொருளாதார அந்தஸ்த்து மேம்படும்.

தாக்கம் :

கிராமங்களிலும் தொலைதூரப் பகுதிகளிலும், தொலைத்தொடர்பு மற்றும் நிதித் தேவைகளை வழங்குவதில் கிளை அஞ்சல் அலுவலகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றின் போஸ்ட் மாஸ்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு பெரிய தொகைகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் பொறுப்பேற்கும் தன்மை பணிகளிலேயே இணைந்துள்ளது. உயர்த்தி வழங்கப்படும் ஊதியம் பொறுப்புணர்வை அதிகரிக்கும். கிராம மக்களிடையே நிதி உள்ளடக்கிய நடைமுறையை உருவாக்குவதில் இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கியும், சிபிஎஸ் கட்டமைப்பும் முக்கிய பங்காற்றும்.

பின்னணி:

அஞ்சல்துறையின் துறை சாராத சேவை அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் முறையான முழு நேர ஊழியர்களுக்கு அவசியம் இல்லாத நிலையில் அடிப்படை, சிக்கன அஞ்சல் சேவை வழங்க இந்த அமைப்பு தேவைப்பட்டது. 1 லட்சத்து 29 ஆயிரத்து 346 துறை சாராத கிளை அஞ்சல் அலுவலகங்கள் கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர்கள் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டது. மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர்கள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள் துணை மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பணியாற்றி வருகிறார்கள். கிராம அஞ்சல் பணியாளர்களைப் பகுதி நேர ஊழியர்களாக அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேர ஊழியர்களாக பயன்படுத்துதல் இந்த அமைப்பின் முக்கிய அம்சமாகும். இவர்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் தொழில்கள் மூலமாகவும் வருமானம் ஈட்ட வேண்டும். இந்தப் பணியாளர்கள் தங்களது 65-ஆவது வயது வரை பணியில் இருப்பார்கள்.

                                —–