Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டி.ஏ.வி கல்லூரி மேலாண்மைக் குழுவின் “புதிய திசை, புதிய தீர்வு” நிகழ்ச்சி – மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

டி.ஏ.வி கல்லூரி மேலாண்மைக் குழுவின் “புதிய திசை, புதிய தீர்வு” நிகழ்ச்சி – மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்


தயானந்தா ஆங்கிலோ வேதிக் கல்லூரியின் மேலாண்மைக் குழு ஏற்பாடு செய்திருந்த புதிய திசை, புதிய தீர்வு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் உரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் கூறியதாவது :

இன்றும் சுவாமி தயானந்தர் தூண்டுகோலாக விளங்குகிறார். சுதந்திரத்துக்காக 1857 – ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆர்ய சமாஜ் மூடநம்பிக்கைக்கு எதிராக போராடி, மாற்றத்தைக் கொண்டுவருவதில் முக்கிய சக்தியாக விளங்கியது.

புதிய தீர்வு என்பது சர்வதேச அளவில் இந்தியாவின் தகுதியை உயர்த்துவது ஆகும். இதுவே சுவாமி தயானந்தாவுக்கு அளிக்கும் உண்மையான அஞ்சலி ஆகும். டி.ஏ.வி-யின் மிகப் பெரிய வலிமையாக விளங்கும் அதன் தற்போதைய மற்றும் படித்து முடித்த மாணவர்களும் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடிவு செய்தால் இது குறுகிய காலத்தில் பெரிய தீர்வுகளை காணலாம். 21 – வது நூற்றாண்டில் நவீன மற்றும் அறிவியல் இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

டி.ஏ.வி கல்லூரி மேலாண்மைக் குழு தூய்மையான கங்கைத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். மக்களின் ஈடுபாடு இல்லாமல் இந்த முயற்சி வெற்றி அடையாது என்று கூறிய பிரதமர் இளைஞர்களுக்கு பலன் அளிக்கும் மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளான முத்ரா வங்கித் திட்டம், தொடங்கிடு இந்தியா, திறன் மேம்பாடு ஆகியவை குறித்தும் பேசினார்.