Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-ஐப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் தொடக்க கூட்டம் நடைபெற்றது


இந்தியா-ஐப்பான் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான (2+2) பேச்சுவார்த்தையின் தொடக்க கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது. 2018 அக்டோபரில் ஜப்பானில் நடைபெற்ற 13-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து ஒத்துழைப்பில் இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்த வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அமைப்பை உருவாக்க பிரதமர் திரு.நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் திரு. ஷின்சோ அபேயும் எடுத்த முடிவை தொடர்ந்து இந்த கூட்டம் நடைபெற்றது.

2+2 கூட்டத்தின் இந்திய குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்கும், வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கரும் தலைமை தாங்கினர். ஜப்பான் குழுவினருக்கு வெளியுறவு அமைச்சர் திரு.டோஷிமிட்சு மாட்டேகியும், பாதுகாப்பு அமைச்சர் திரு.டாரோ கோனோவும் தலைமை தாங்கினர்.

இந்தியா-ஜப்பான் இடையே பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து ஒத்துழைப்பின் நிலையை ஆய்வு செய்யவும், வலுப்படுத்துவதற்கான கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இருதரப்பிற்கும் 2+2 கூட்டம் வாய்ப்பை வழங்கியது. இதன் மூலம் ‘இந்தியா-ஜப்பான் இடையே சிறப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் உலக பங்களிப்பை’ ஆழப்படுத்த முடியும்.

இருதரப்பினரும் இந்தியா பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை குறித்தும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர். இரு நாடுகள் மற்றும் இந்த பிராந்தியத்தின் மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அமைதி, வளம் மற்றும் முன்னேற்றம் என்ற நோக்கத்தை அடைவதற்கு இந்தியாவின் “செயல்பாட்டுக்கான கீழைத்தேசக் கொள்கை”, ஜப்பானின் “தாராள மற்றும் வெளிப்படையான இந்தியா-பசிபிக் பார்வை” ஆகியவற்றின் கீழ் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.