பி.எம்.இந்தியா
மாண்புமிகு அதிபர் ஜோஹன் ஷ்னைடர்-அம்மான்,
நண்பர்களே
என்னை அன்புடனும் கனிவுடனும் வரவேற்றதற்காக அதிபருக்கு நன்றி. இந்த சர்வதேச நகரமான ஜெனீவாவில் நிற்கும்போடு இதன் வரலாற்று பெருமையை நான் உணர்கிறேன். இது சர்வதேச நகரம் மட்டும் அல்ல மனிதாபிமானம் உள்ள மக்களின் நகரம். செஞ்சிலுவை போன்ற பல மனித சேவை ஆற்றும் நிறுவனங்களுக்கு தலைமையகம் ஆயிற்றே.
நண்பர்களே
உலகத்தில் அமைதி, புரிதல் மற்றும் மனிதாபிமானம் குறித்து பேசும் நாடுகள் இந்தியாவும் சுவிட்சர்லாந்தும். இன்று நானும் அதிபரும் நமது பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்தோம். மேலும் சுவிஸ் தலைமை செயல் அலுவலர்களுடன் நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
நண்பர்களே
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதார உறவு மிக வலுமையாகவும் செழிப்பாகவும் உள்ளது. பல சுவிஸ் நிறுவனங்கள் இந்தியாவில் பெயர்பெற்று விளங்குகின்றன. வர்த்தகம், முதலீடு, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் நிலவிவரும் ஒத்துழைப்பு உறவுகளை இரு சமூகங்களுக்கு நன்மையை அளிக்கிறது. ஐரோப்பிய தடையற்ற வர்த்தக கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச இந்தியா தயாராக உள்ளது என்பதை நான் வலியுறுத்தி உள்ளேன். நம் அனைவருக்கும் சுவிஸ் பொருளாதாரத்தின் பலம் தெரியும்.. ஆனால், இந்தியாவிலும் பல முக்கிய மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. நாங்கள் இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக விளங்குகிறோம். ஆனால், அது மட்டும் போதாது. ஸ்மார்ட் மற்றும் நிலையான நகரங்கள், வலுவான விவசாயத் துறை, துடிப்பான உற்பத்தி மற்றும் உத்வேகமான சேவை துறைகளால் இந்திய பொருளாதாரம் நிலைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் அதன் இயந்திரங்களான ரயில்பாதைகள், விமான நிலையங்கள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு போர்வை உலக தரம் கொண்டதாக அமைய வேண்டும். மேலும் அனைவருக்கும் வீடு அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி என்பது நினைவாக வேண்டும். மேலும் அதன் 500 மில்லியின் இளைஞர்கள் திறன் பெற்று சர்வதேச ஆள் பலம் தேவைகளை நிறைவேற்றக் காத்திருக்கின்றன. இந்தியாவிற்கு தேவையான சுவிஸ் தொழிற்கல்வி மற்றும் கல்வி பயிற்சி அமைப்பினை உருவாக்க நானும் அதிபரும் ஒப்புக்கொண்டோம். நேற்று நாம் உலக சுற்றுச்சூழல் தினத்தை அனுசரித்தோம். அதன் நோக்கங்களுக்கு ஏற்றதுபோல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கு ஏற்றதை போல் அமைய இந்திய கலாச்சரா பண்பு வழிவகுக்கிறது. படிம எரிபொருள்களுக்கு மாறாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துவதே எங்களின் தாரக மந்திரமாக இருக்கும்.
நண்பர்களே,
எங்களது வளர்ச்சி தேவைக்கும் சுவிஸ் நாட்டின் பலத்திற்கு ஒரு சரியான இணைப்பு இருப்பதை பார்க்கின்றோம். அதனால், நான், இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காகும் வாய்ப்பினை பயன்படுத்துமாறு சுவிஸ் நிறுவனங்களை கேட்டுக்கொள்கிறேன். 1.25 பில்லியனுக்கு மேலான மக்களின் பொருளாதார வளர்ச்சி உலகிற்கும் நன்மையை உண்டாக்கும்.
நண்பர்களே,
தற்போதைய உலக எதார்த்த நிலைமைகளுக்கு ஏற்ப சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்ற உறுதிப்பாடும் இந்தியா – சுவிட்சர்லாந்து இடையே உள்ள ஒரு பொதுவான எண்ணமாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பினர் குறித்த நிலைபாட்டில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம். அணு வினியோகக் குழுவில் இந்தியாவை உறுப்பினராக ஆதரவு தெரிவித்ததற்காகவும் நான் சுவிட்சர்லாந்து அதிபருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். “கறுப்பு பணம்” மற்றும் வரி ஏய்ப்பு அச்சுறுத்தல் போரிடுவதற்கும் இருவரும் முன்னுரிமை அளிக்கிறோம். வரி ஏய்ப்பாளர்களை நீதிக்குமுன் நிறுத்த தேவையான தகவல்களை விரைவாக பரிமாறுவதன் அவசியம் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினோம். இது தொடர்பாக தன்னிச்சை தகவல் மாற்று ஒப்பந்தத்தை கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் நடத்துவது முக்கியமாகும்.
நண்பர்களே,
இரு நாட்டு மக்களுக்கு இடையே உள்ள வலுவான உறவே நம் இருதரப்பு உறவிற்கு பாலமாக உள்ளது. சுவிட்சர்லாந்தின் இயற்கை அழகை எங்களுக்கு பரிச்சயபடுத்திய இந்திய திரைப்படத் துறைக்கு நன்றி. ஆனால், அதிகளவில் சுவிஸ் மக்கள் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என்று அழைக்கிறோம். இதற்கா இந்த ஆண்டின் துவக்கத்தில் சுவிஸ் மக்களுக்காக இ-சுற்றுலா விசா வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
நண்பர்களே,
நமது உறவுக்கு பல சாதனை கதைகள் உள்ளன. அதில் ஒன்று டென்னிசு போட்டிகளுக்கான பெருவெற்றித் தொடரில் இந்திய வீரர்களை சானியா மிர்சா மற்றும் லியாண்டர் பயஸுடனான சுவிட்சர்லாந்து வீரர் மார்டினா ஹிங்கிசின் கூட்டணி. நமது பொதுவான இலட்சியங்கள், மதிப்புகள், மக்களிடையே உள்ள இணைப்பு, மற்றும் வளர்ந்துவரும் வலுவான பொருளாதார கூட்டுறவு போன்றவை நமது உறவினை புது உயரங்களுக்கு எடுத்துச்செல்லும். என்னை ஜெனீவாவிற்கு அழைத்ததற்காக அதிபருக்கு நான் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி. மிக்க நன்றி.
***