Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரகாண்ட் சமோலியில் ஏற்பட்ட பனிச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க பிரதமர் ஒப்புதல்


உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் பனிச்சரிவினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகை வழங்க, பிரதமர் திரு.நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் நிவாரணத் தொகை வழங்குவதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரதமரின் அலுவலகம் விடுத்துள்ள சுட்டுரை செய்தியில், “உத்தரகாண்ட் சமோலியில் பனிச்சரிவினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளது

 

***