பி.எம்.இந்தியா
எங்களைப் பற்றி:
கொவிட்-19 தொற்று ஏற்படுத்தியது போன்ற, எந்தவொரு அவசரநிலை அல்லது துயர சூழ்நிலையையும் கையாள்வதற்கான முதன்மை நோக்கத்துடன், ஒரு பிரத்தியேக தேசிய நிதியை வைத்திருப்பதன் அவசியத்தை மனதில் வைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ‘அவசர காலங்களில் மக்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான பிரதமரின் நிதி (PM CARES Fund) என்ற பெயரில் ஒரு பொது தொண்டு நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நன்கொடை வழங்க இங்கே கிளிக் செய்யவும் .
குறிக்கோள்கள்:
• பொது சுகாதார அவசர நிலை அல்லது பிற அவசர நிலை, பேரிடர் அல்லது துயரம், மனிதராலோ அல்லது இயற்கையாலோ ஏற்படுத்தப்பட்டது போன்றவற்றுக்கு நிவாரணம் அல்லது உதவி அளிப்பது, சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள், இதர கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது, இது தொடர்பான ஆராய்ச்சிக்கு உதவுவது போன்றவை.
• நிதி உதவியை வழங்குவது, மானியங்கள் வழங்குவது, அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறங்காவலர் குழு அவசியமாகக் கருதக்கூடிய பிற நடவடிக்கைகளை எடுப்பது.
• மேற்கூறியவைகள் அல்லாமல் வேறு நடவடிக்கை மேற்கொள்ளவது.
அறக்கட்டளை அமைப்பு:
• பிரதமர் கேர்ஸ் நிதியின் தலைவர் பிரதமர். பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர்கள் ஆகியோர் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள்.
• அறக்கட்டளையின் தலைவராக உள்ள பிரதமருக்கு, 3 அறங்காவலர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அவர்கள் ஆராய்ச்சி, சுகாதாரம், அறிவியல், சமூக சேவை, சட்டம், பொது நிர்வாகத் துறைகளில் பிரபல நபர்களாகவும், ஈகை கொண்டவராகவும் இருக்கலாம்.
• அறங்காவலராக நியமிக்கப்படும் எந்த நபரும், பொது நல நோக்கில் செயல்பட வேண்டும்.
இதர விவரங்கள்:
• இந்த அறக்கட்டளை நிதி முழுவதும், தனிநபர்கள்/அமைப்புகளின் தன்னார்வ நிதி. இதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுவது இல்லை. மேலே குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
• பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு, வருமானவரிச் சட்டம் 1961, 80ஜி பிரிவுப்படி 100 சதவீத வருமானவரி விலக்கு உண்டு. பிரதமர் கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகளும், கம்பெனிகள் சட்டம், 2013-ன் கீழ் பெருநிறுவன சமூக பொறுப்பு(சிஎஸ்ஆர்) செலவினமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
• பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு, வெளிநாட்டு நிதிபங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற தனிக் கணக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரதமரின் கேர்ஸ் நிதி வெளிநாடுகளில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகளைப் பெற முடியும். இதுவும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) போன்றதுதான். பிரதமரின் தேசிய நிவாரண நிதியும், கடந்த 2011ம் ஆண்டு முதல் பொது அறக்கட்டளையாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்று வருகிறது.