பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை அந்தமான் – நிகோபார் தீவுகளுக்கான உடற்கூறாய்வு ஒழுங்கமைப்பு விதிகள், 2016 –ஐ அறிவிப்பதற்கான தனது ஒப்புதலை வழங்கியது. அனைத்து மருத்துவப் பிரிவுகளிலும் மனித உடற்கூறு பற்றிப் பயிலும் நோக்கத்திற்காக உரிமை கோரப்படாத சடலங்களை மருத்துவக் கல்லூரிக்கு பெறுவது; வழங்குவது ஆகியவை குறித்த வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்துடன் இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பின்னணி:
போர்ட் பிளேரில் உள்ள ஜி.பி. பந்த் மருத்துவமனையை மேம்படுத்தியதன் மூலம் 100 படுக்கை வசதி கொண்ட ஒரு மருத்துவக் கல்லூரியை அந்தமான் – நிகோபார் தீவுகளுக்கான நிர்வாகம் உருவாக்கியுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அந்தமான் – நிகோபார் மருத்துவ அறிவியல் நிறுவனம் மாணவர்களை சேர்ப்பதற்கான பணிகளை முடித்து, 2015ஆம் ஆண்டு செப்டம்பரிலிருந்து மருத்துவ அறிவி பட்டப் படிப்பிற்கான முதல் ஆண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.