Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அனைத்து உயிரினங்கள் நலனையும் இயற்கையுடன் இணக்கத்தோடு வாழ்வதையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


இயற்கையோடு சமநிலையுடன் வாழ்வதை பின்பற்றுவதன் மூலம், அனைத்து உயிரினங்களின் நலன்களை அடைவதே நமது கலாச்சாரத்தின் முக்கியக் கொள்கையாக உள்ளது என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.

இந்த விரிவான தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா தற்போது வளர்ச்சி, வளமைப் பாதையில் தொடர்ந்து முன்னேறுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

நான்கு திசைகளின் பரந்த எல்லைகளையும், கூர்மையான விழிப்புணர்வுடன் கூடிய பார்வையையும் கொண்ட வளமையை நாம் அடைவோம். அதில் இயற்கையோடு முழுமையான இணக்கத்துடன் வாழ்ந்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, அனைத்து உயிரினங்களின் நிலையான நல்வாழ்வும் உறுதி செய்யப்படுகிறது.

***

Release ID: 2270126

SS/IR/LDN/PD