Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க அதிபர் ஒபாமா பிரதமர் மோடியுடன் தொலைபேசி மூலம் உரையாடல்


அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் அழைத்து பேசினார். அப்போது, சி.ஓ.பி.-21 உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய பங்கிற்கும் தலைமைத்துவத்துக்கும் நன்றி தெரிவித்தார். பருவநிலை மாற்றம் குறித்தான பாரீஸ் உச்சி மாநாட்டின் வெற்றிக்கு பிரதமர் மோடி முக்கிய பங்கு ஆற்றியுள்ளார் என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

எச்-1-பி மற்றும் எல்-1 விசாக்கள் குறித்து அமெரிக்க சட்டமன்றத்தில் முன்நிறுத்தப்பட்டுள்ள சட்டத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிலைமை மற்றும் அத்துறையில் பணிபுரிபவர்கள் நிலைமை குறித்து விசாரித்தார்.

*****