Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க அதிபர் திரு டிரம்பின் முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு


பிரதமர் திரு நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் திரு டிரம்பின் முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்த முன்னேற்றம் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகுவின் வலுவான தலைமைத்துவத்தை பிரதிபலிப்பதாகவுள்ளது என்று பிரதமர் திரு மோடி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை பிணைக் கைதிகளை விடுவிப்பதும், காசாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க அதிபர் திரு டிரம்பின் அமைதி ஒப்பந்தம் குறித்த முதற்கட்ட திட்டம் வரவேற்கத்தக்கது. இது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வலுவான தலைமைத்துவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதும், காசாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிப்பதற்கும் அப்பகுதியில் அமைதி ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

***

(Release ID: 2176610 )

SS/SV/SG/KR