பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் ட்ரம்ப் உடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, முக்கியத் தொழில்நுட்பங்கள், பரஸ்பர விருப்பம் உள்ள இதர துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.
இந்திய-அமெரிக்க விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் வலியுறுத்தியதுடன், இரு நாட்டு மக்களின் நலனுக்காக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இணைந்துப் பணியாற்றவும் இசைவு தெரிவித்தனர்.
பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட தலைவர்கள், உலக அமைதியையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் ஆலோசித்தனர்.
எதிர்காலத்தில் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆலோசிக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2317267®=3&lang=1
****
TV/BR/SH