பி.எம்.இந்தியா
அயர்லாந்தில் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் வணக்கம்!
முதலாவதாக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் உங்களோடு நான் அதிக நேரத்தை செலவிட்டிருக்க வேண்டும். அனுமதி கிடைக்காததற்காகவும் உள்ளே வர இயலாததற்காகவும் ஏராளமான மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நான் இங்கே வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டது நல்லதற்காகவே எனலாம். அதனால்தான் இங்கே குடியிருக்கின்ற பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்களை நான் சந்திக்க முடிந்துள்ளது. எவ்வாறாயினும், இதனை ஒரு நல்ல துவக்கம் என்றே நான் கூறுவேன். இந்தியாவின் பிரதமர் கடைசியாக இங்கே பயணம் மேற்கொண்டது பற்றி பலரோ உங்களில் ஒருசிலரோ அறிந்திருக்கக்கூடும். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப்பின் இந்தியப் பிரதமர் இங்கே வந்திருப்பதாக என்னிடம் சொல்லப்பட்டது. நாங்கள் தில்லியிலிருந்து நியூயார்க் நோக்கிப் பயணம் செய்யும் போதெல்லாம் இங்குள்ள ஆகாயத்தின் வழியாகவே செல்கிறோம். உங்கள் அன்பு என்னைக் கவர்ந்தது. அதனால் இங்கே நான் இறங்கி வந்திருக்கிறேன்.
அயர்லாந்து பிரதமருடன் இன்று நான் விரிவான விவாதம் நடத்தியிருக்கிறேன். மிகக் குறைந்த நேரமே கிடைத்தாலும் சந்திப்பு நன்றாக இருந்தது. பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம். பல விஷயங்களில் பொதுக்கருத்து இருக்கிறது. இந்தியா-அயர்லாந்து இடையேயான உறவு மேலும் ஆழமாக என்று நான் நம்புகிறேன். பல விஷயங்களில் இரு நாடுகளும் இணைந்திருக்க வேண்டியுள்ளது. 2016-ல் நாட்டின் சுதந்திரம் மற்றும் அதனோடு தொடர்புடைய போராட்டங்களின் நூற்றாண்டினை அயர்லாந்து கொண்டாடி வருகிறது. அயர்லாந்து போராடிய அதே காலத்தில் இந்தியாவும் கூட சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தது. உண்மையில் இது நமது இணைந்த பாரம்பரியம். 2016-ல் அயர்லாந்து விடுதலைப் போராட்ட நூற்றாண்டு விழாவில் இந்தியா கூட்டனியாக இருக்க வேண்டும். பங்கேற்பாளராகவும் கூட இந்தியா இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம்.
குறிப்பிடத் தக்க காரணங்களால் இந்தியாவும் அயர்லாந்தும் ஒன்றோடொன்று தொடர்புடையனவாக இருக்கின்றன. இதனால் இவற்றின் மாண்புகள் தனித் தன்மை வாய்ந்தவை. இந்தியாவில் வாய்மைக்காக வாழ்கிறோம் உயிரையும் விடுகிறோம். குறிப்பிட்ட தத்துவங்களுக்காகவும் சிந்தனைக்காகவும் சுய தியாகம் செய்வது பற்றி பல நூற்றாண்டுகளாகக் கேள்விப்படுகிறோம். தாங்களே வலியைத் தாங்கிக் கொள்வதன் மூலம் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோல் 1920 ஆம் ஆண்டு அயர்லாந்து பட்டினிப் போராட்டத்தின் போது குடிமக்கள் உயிர்விட்டதாக மக்கள் சொல்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே மாண்புகள் பகிர்ந்து கொண்டது பற்றி கற்பனை செய்து பார்க்க முடியும் என்பதை இது உணர்த்துகிறது. மனித குலத்தோடு தொடர்புள்ள இதுபோன்ற விஷயம் அதற்குள்ளாகவே ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இதுபோன்ற விஷயங்களுக்கு நமது முயற்சிகள் உத்வேகத்தை அளிக்கும்.
ஐரிஷ் குழந்தைகள் வரவேற்புப் பாடலை சமஸ்கிருதத்தில் குரலெடுத்துப் பாடினார்கள். மனனம் செய்த வார்த்தைகள் அவர்கள் சொல்கிறார்கள் என்ற உணர்வை நான் பெற்றிருக்கவில்லை. அவர்களால் பாடப்பட்ட பாடல்களின் வார்த்தைகளை உணர்ந்து வெளிப்படுத்த முடிந்துள்ளது. இதன் பொருள் அவர்கள் விஷயத்தை உங்வாங்கிக் கொண்டவர்கள் என்பதாகும். இத்தகைய பணியை மேற்கொண்ட ஆசிரியர்களை நான் வாழ்த்துகிறேன். இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும் அயர்லாந்தில் நாம் இதைச் செய்ய முடியும். ஆனால் இதுபோன்ற செயலை நாங்கள் இந்தியாவில் செய்திருந்தால் மதச் சார்பின்மை மீதான கேள்விக் குறியாக மாறியிருக்கக் கூடும்.
இக்காலத்தில் நிலைமைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. யோகாவிலிருந்து யோகத்திற்கு என்று உலகம் சொல்வதை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒட்டுமொத்த உலக்கமும் மூக்கைப் பிடிக்க ஆரம்பித்துள்ளது. உலகின் ஒவ்வொரு நாடும் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடியது. நோய் தீர்க்கும் சுகாதாரத்திற்கும் நோய்த்தடுப்பு சுகாதாரத்திற்கும் ஏற்கத்தக்க ஒப்புக் கொள்ளப்பட்ட முறையாக 1000 ஆண்டு பழமை வாய்ந்த இந்திய அறிவியல் இப்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. முன்பெல்லாம், உடல் நிலை பாதிப்பு இல்லையென்றால் ஆரோக்கியமாய் இருப்பதாக நான் நினைத்துக் கொண்டோம். இப்போது இந்த எண்ணம் இந்தியச் சிந்தனை முறையில் ஒரு பகுதியாக இல்லை. உடல் நலம் பாதிக்காமல் இருப்பதே ஆரோக்கியம் என்பது இனிமேலும் நமது கருத்தாக இருக்கப் போவதில்லை. ஆரோக்கியம் பற்றிய பேச்சில் இரண்டு படிநிலைகள் இருப்பதாக நாம் நினைக்கிறோம். யோகா என்பது நமது சிந்தனை ஆரோக்கியத்தோடும் இணைந்ததாக இருக்கிறது. நோயிலிருந்து விடுபட்ட காரணத்தாலேயே ஆரோக்கியத்துடன் இருப்பதாக சொல்ல முடியாது. இந்தியாவின் அடிப்படை விஷயங்களை உலகம் ஏற்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்தியாவிடம் ஆற்றல் இருக்கும் போது மட்டுமே உலகம் ஏற்றுக் கொள்கிறது. இந்தியாவிடம் திறன் இல்லாமல்போனால் உலகம் ஏன் அதனை அங்கீகரிக்க வேண்டும்?
21 ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்று உலகம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் இந்தியாவின் வளர்ச்சி பற்றி உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. இது இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என்ற உண்மையை உலகம் மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறது.
பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) கோட்பாடு 1980 களில் உருவானது. இதுவே பிரபலமான வார்த்தையாக வேண்டியிருக்கிறது. இருப்பினும் ஒரு சில ஆண்டுகளுக்கு முன் பி, ஆர், சி, எஸ் என்ற வாகனம் வழித்தடத்தில் இருந்த போது ஒரு விவாதம் நடைபெற்றது. “ஐ” என்பது மிகவும் பின் தங்கியிருந்தது. இந்த “ஐ” க்கு (இந்தியா) மாற்றாக இந்தோனேஷியா இருக்கும் என்று கூட அவர்களால் சொல்லப்பட்டது. இது விவாதமாகவும் இருந்தது. பிரிக்ஸ் அமைப்பில் சக்தி வாய்த நாடு இருக்கிறது என்றால் அது “ஐ” ஆக இருக்கிறது என்று இப்போது உலக வங்கி, ஐ.எம்.எஃப் மற்றும் பிற கடன் வழங்கும் முகமைகள் எல்லாமும் சொல்கின்றன. உலகில் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி பெற்றுவருவது இந்தியா என உலகம் முழுவதும் உள்ள மதிப்பீட்டு முகமைகள் கூறுகின்றன.
இதே வேகத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் போக்கு இருக்குமானால் இந்தியாவில் வறுமையின் அறிகுறியே இருக்காது. இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். என்றாலும் இந்த வேகத்தை 30 ஆண்டுகளுக்குப் பராமரிப்பது பெரிய சவாலாக இருக்கும். ஆனால் எப்போதும் எண்ணிப்பார்த்திராத ஆற்றலுடன் இருப்பதால் இந்த சவாலை நம்மால் சமாளிக்க முடியும். இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கும் குறைவானவர்களாக இருக்கிறார்கள். இந்தியா இளமையானது. இளைய சக்தியின் மேல் அது கட்டமைக்கப்படும். 30 ஆண்டுகளின் கனவை நிறைவேற்ற நாம் பெற்றுள்ள திறன் நமக்கு உதவி செய்யும்.
வளர்ச்சியின் புதிய உச்சங்களை நாடு கடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் நாட்டை வெற்றிகரமாக முன்னேற்றிக் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்திய சமூகத்தவரும் நேருக்குநேரான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு தலை நிமிர்ந்தும் நாட்டைப் பற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இதைவிடப் பெரிய பெருமிதம் என்னவாக இருக்க முடியும்? இப்போது இந்தியர் எவரும் தலைகுனிய வேண்டிய அவசியமே இல்லை. இது ஒரு மகத்தான சக்தி என்று தங்களின் தலையை நிமிர்த்தி நிற்பதற்கான காலம் இப்போது அவர்களுக்கு வந்திருக்கிறது.
குறுகிய கால அவகாசத்தில் எனது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் உங்கள் அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நீங்கள் எல்லாம் இங்கே இரண்டிருப்பதற்கு அப்பால், யாரை நிறுத்துவது யாரை உள்ளே விடுவது என்ற பெரம் வாக்குவாதம் அங்கே நடந்ததாக உங்களின் தூதர் கூறினார். கூடுதல் அவகாசம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஏற்கனவே நான் கூறியதைப்போல இது நல்லதொரு தொடக்கமாகும். இந்த உறவு மேலும் வலுப்படுத்தப்படும். இந்தியப் பிரதமர் இங்கே வருவதற்கு 60 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளமாட்டார் என்ற உறுதி மொழியை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.
உங்களுக்கு மிக்க நன்றி.
*****
I will begin by apologising...I wish I had spent more time with you. I thank you for the warm welcome: PM to Indian community in Ireland
— PMO India (@PMOIndia) September 23, 2015
I had detailed discussions with your PM. We spoke about so many issues: PM @narendramodi https://t.co/3JPTyeO3Ap
— PMO India (@PMOIndia) September 23, 2015
Our values are shared. This has been seen in history as well: PM @narendramodi https://t.co/3JPTyeO3Ap
— PMO India (@PMOIndia) September 23, 2015
Today the world is talking about the development in India. People are thinking- who knows, 21st century can be India's: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 23, 2015
India belongs to the youth and it is the youth that will take India to newer heights: PM @narendramodi https://t.co/3JPTyeO3Ap
— PMO India (@PMOIndia) September 23, 2015
Overwhelmed by the community programme in Dublin. Recital of Shlokas in Sanskrit by children was very touching. pic.twitter.com/H9xUTmTupu
— Narendra Modi (@narendramodi) September 23, 2015
Spoke about growing global optimism towards India & how India's youth will take India to newer heights of progress. http://t.co/IvCe9bWzni
— Narendra Modi (@narendramodi) September 23, 2015
Spoke about growing global optimism towards India & how India's youth will take India to newer heights of progress. http://t.co/IvCe9bWzni
— Narendra Modi (@narendramodi) September 23, 2015
Simply mesmerising! Great to see these children recite in Sanskrit.
https://t.co/pMwPnLNcOg
— Narendra Modi (@narendramodi) September 23, 2015