Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசின் தலைமைப் பொறுப்பில் இருந்து தேசத்திற்கு 25 ஆண்டு கால சேவையை நிறைவு செய்ததற்காக பூடான் பிரதமர் திரு ஷேரிங் டோப்கேயின் வாழ்த்துக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, பூடான் பிரதமர் திரு ஷேரிங் டோப்கேயின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா- பூடான் இடையே பரஸ்பரம் நம்பிக்கை, புரிதலில் வேரூன்றிய ஒரு நீடித்த ஒத்துழைப்பால் பிணைக்கப்பட்டிருப்பதாகவும், வளர்ச்சியடைந்த இந்தியா, வளமையான பூடான் குறித்த பகிரப்பட்ட கண்ணோட்டத்துடன்  முன்னேற்றுவதற்கு, நெருங்கிய ஒத்துழைப்பை எதிர்நோக்குவதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமர் திரு டோப்கே, அன்பான, இதயப்பூர்வமான வாழ்த்துகளுக்கு  நன்றி.

இந்தியா-பூடான் இடையே பரஸ்பரம் நம்பிக்கை, புரிதலில் வேரூன்றிய நீடித்த ஒத்துழைப்பால் பிணைக்கப்பட்டுள்ளன. வளச்சியடைந்த இந்தியா, வளமான பூடான் குறித்த பகிரப்பட்ட கண்ணோட்டத்துடன்  முன்னேற்றுவதற்கான நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

—-

(Release ID: 2320420)

TV/BR/SU