Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசுப் பணிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார்


அரசுப் பணிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (23.05.2026) காலை 11 மணிக்கு நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனக் கடிதங்களை வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் உரையாற்றுகிறார்.

வேலைவாய்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்ற பிரதமரின் உறுதியான நிலைப்பாட்டுக்கு ஏற்ப இதற்கு செயல்வடிவம் வழங்கும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த வேலைவாய்ப்பு முகாம் அமைந்துள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 12 லட்சம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள 19-வது வேலைவாய்ப்பு முகாம் நாடு முழுவதிலும் 47 இடங்களில் நடைபெறுகிறது.  நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதாக பணியில் சேரும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே, சுகாதாரம், நிதிச் சேவைகள் துறை., உயர்கல்வி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

***

(Release ID: 2264076)

SS/SV/KPG/SE