Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அறிவுசார் சொத்து துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா, இங்கிலாந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அறிவுசார் சொத்து துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா, இங்கிலாந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பின்னேற்பு ஒப்புதல் அளித்தது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 07.11.2016 அன்று கையெழுத்தானது.

இயந்திர மயமாக்குதல் மேம்பாடு, புதிய வகை ஆவணப்படுத்துதல் மற்றும் அறிவுசார் சொத்து தொடர்பான தகவல் அமைப்பு முறை ஆகியவற்றின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உயர்த்தவும் உதவும் விரிவான நெகிழ்ச்சித்தன்மையுடன் கூடிய அமைப்பை ஏற்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. பயிற்சித் திட்டங்கள், நிபுணர்கள் பரிமாற்றம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தொலைதூரச் செயல்பாடுகளில் ஒத்துழைப்பு வாய்ப்புக்களை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமலாக்குவதால் பதிவு உரிமை, வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக சின்னங்கள் தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்தின் பதிவு உரிமை மனுக்கள் பரிசீலனைத்திறன் மேம்படும். இதனை அடுத்து புதுமைப் படைப்புகள் ஊக்குவிக்கப்படும்.