Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அவசரநிலைக் காலத்தில், ஜனநாயகத்தை பாதுகாத்தவர்களுக்குப் பிரதமர் மரியாதை


இந்திய வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட காலத்தில், ஜனநாயக விழுமியங்களை உறுதியுடன் பாதுகாத்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்த காலக்கட்டம், மௌனமாக இருக்க மறுத்து, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளக் கொள்கைகளை நிலைநிறுத்திய எண்ணற்ற குடிமக்களின் அசாத்திய  துணிச்சலையும், மன உறுதியையும் வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்கள் மீதான நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், “அரசியலமைப்புச் சட்டம் என்பது, 140 கோடி இந்திய மக்களின் விருப்பங்கள், உரிமைகள், கடமைகளின் உருவகமாகத் திகழ்கிறது. இத்தகைய உணர்வின் வழிகாட்டுதலுடன், இந்தியா ஜனநாயக அடித்தளத்தை தொடர்ந்து வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை உறுதியாக பின்பற்றுவோம்” என்று கூறியுள்ளார்.

ஜனநாயகம், அரசியலமைப்பு, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தும் சமஸ்கிருத சுபாஷிதத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய வரலாற்றின் மிக இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டக் காலத்தில், ஜனநாயக விழுமியங்களை உறுதியுடன் பாதுகாத்த அனைவருக்கும் இன்று நாம் மரியாதை செலுத்துகிறோம்.

அவசரநிலை என்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான நேரடித் தாக்குதலாக இருந்தது. அது குடிமக்களின் உரிமைகள் இடைநிறுத்தம், கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களின் கைதுகள்ஜனநாயகத்தின் அடித்தளமாகத் திகழும் அமைப்புகள் மீதான தாக்குதல் போன்ற அத்துமீறல்களைக் கண்டது.

அதே வேளையில், அவசரநிலை அமலில் இருந்த காலத்தில் மௌனமாக இருக்க மறுத்து, நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளக் கொள்கைகளை நிலைநிறுத்திய எண்ணற்ற குடிமக்களின் அசாத்திய துணிச்சலையும் வெளிப்படுத்தியுள்ளது.

140 கோடி இந்தியர்களின் விருப்பங்கள், உரிமைகள், கடமைகளின் உருவகமாக அரசியலமைப்புச் சட்டம் திகழ்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான,ஒன்றிணைந்த  உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுப்பூர்வமான வழிகாட்டுதலுடன், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அம்சங்களில்  எப்போதும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இந்தியாவை கட்டமைப்போம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277620&reg=3&lang=1 

***

SS/SV/RJ