பி.எம்.இந்தியா
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிக்கான உடன்பாட்டு விதிகளை பின்னேற்பதற்கும் சமர்ப்பிப்பதற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை நிறுவுவதன் மூலம் இந்தியா உள்ளிட்ட கையெழுத்திட்ட அனைத்து நாடுகளும் வளர்ச்சியடையும். இந்த வங்கி மூலம் இந்த நாடுகள் தங்களின் உட்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்களுக்கு உதவி பெறமுடியும். ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கியில் கடன் பெறும் முக்கிய நாடாக இந்தியா இருக்கும். சீனாவிற்கு அடுத்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் முக்கிய பங்குதாரராக இந்தியா உள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் உறுப்பினராவதன் மூலம் இந்தியா வளர்சியடைவதோடு உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான வளங்களையும் பெற முடியும்.
பின்னணி:
இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான நிதி, அரசு மற்றும் பலதரப்பு வளர்ச்சி வங்கிகள் மூலம் பெறப்பட்டது. அதன்பின், பொது-தனியார் பங்கேற்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மூலம் பெறப்படும் நிதி உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு புது உத்வேகத்தை அளிக்கும்.