Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டோராப் மதன், சுபம் வாத்வா ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து


2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் இரட்டையர் எம்டி4  பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டோராப் மதன், சுபம் வாத்வா ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்த வெற்றியின் மூலம் பாரா விளையாட்டுப் போட்டித் தொடரின் இந்தப் பிரிவில் இந்தியா முதல் பதக்கததை வென்றுள்ளதாகக் குறிப்பிட்ட திரு மோடி, வீரர்கள் இருவரும் எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

 

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் இரட்டையர் எம்டி4  பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஜெஹான் டோராப் மதன், சுபம் வாத்வா ஆகியோருக்கு வாழ்த்துகள்! இவர்களின் இந்த வெற்றி, இந்தப் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கமாகும். வீரர்கள் இருவரும் எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2327580&reg=3&lang=1

****

TV/BR/SH