பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் படகுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நேத்ரா குமணனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது உண்மையில் இந்தியாவிற்கு ஒரு மாபெரும் சாதனை என்று பிரதமர் கூறியுள்ளார்.
நேத்ரா குமணன் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, அவர் நாட்டில் புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பார் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் படகுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நேத்ரா குமணனுக்கு வாழ்த்துகள்! இது உண்மையிலேயே இந்தியாவிற்கு ஒரு மாபெரும் சாதனை. அவர் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி, நம் தேசத்தில் புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கட்டும்: பிரதமர் நரேந்திரமோடி”
(Release ID: 2318265)
****
TV/PLM/SH
Congratulations to Nethra Kumanan on winning the Bronze Medal in the Women’s Dinghy event at the Asian Games! This is indeed a great accomplishment for India. May she continue to scale new heights and inspire a new generation of athletes in our nation: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 2, 2026