Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடல்


ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். பதக்கம் வென்ற பல வீரர்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பது அற்புதமான சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இளம் விளையாட்டு வீரர்களின் ஆர்வம் வெற்றியாக மாறும்போது, அது பதக்கங்களுடன் சேர்த்து முகத்தில் ஒரு பிரகாசத்தையும் கொண்டு வரும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இது” என்று அவர் கூறினார்.

140 கோடி இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த பிரதமர், தேசியக் கொடியின் கௌரவத்தையும், புகழையும் உயர்த்துவதே மிகச்சிறந்த சாதனை என்று தெரிவித்தார். நாட்டின் இந்த ஒட்டுமொத்த வெற்றிக்காக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

 

இந்த வெற்றி நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வெற்றி என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் பிறந்தநாளையொட்டி, அன்னாருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார். டாக்டர் கலாமின் சிறப்பான வாழ்க்கை, தொலைநோக்குப் பார்வை இன்றும் நாட்டிற்கு வழிகாட்டுவதை அவர் சுட்டிக்காட்டினார். அவரது வாழ்க்கையும், தொலைநோக்குப் பார்வையும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் படைக்கப்பட்ட வரலாற்றுச் சாதனைகளை நினைவு கூர்ந்த பிரதமர், ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தங்கம் வென்றது (மகளிர் அணி 44 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு தங்கம் வென்றது) சிறப்பான தருணம் என்று கூறினார். மேலும், கிரிக்கெட் அணிகள் தொடர்ந்து பதக்கங்களை வென்றதையும், கபடியில் இரண்டு தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியதையும் அவர் பாராட்டினார். வில்வித்தையில் ஐந்து தங்கப் பதக்கங்கள், துப்பாக்கிச் சுடுதல், குத்துச்சண்டை, மல்யுத்தத்தில் சிறப்பான செயல்பாடுகள், தடகளத்தில் புதிய சாதனைகள், 28 ஆண்டுகளுக்குப் பிறகு பளுதூக்குதலில் பதக்கம், 1982-க்குப் பிறகு மாரத்தானில் கிடைத்த வெற்றி ஆகியவற்றையும் அவர் வெகுவாகப் பாராட்டினார். இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டி, பல்வேறு வழிகளில் நம் அனைவருக்கும் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது, என்று அவர் கூறினார்.

 

தடகளப் போட்டியில் மொத்தமுள்ள 85 பதக்கங்களில், இந்தியா 38 பதக்கங்களை (11 தங்கப் பதக்கங்கள் உட்பட) வென்ற மகளிர் தடகள  விளையாட்டு வீராங்கனைகளின் அபார பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், அவர்களின் இந்த வெற்றி புள்ளிவிவரமாக மட்டுமின்றி, அதிகாரமளிக்கப்பட்ட புதிய இந்தியாவின் பிரதிபலிப்பாக உள்ளது என்று குறிப்பிட்டார். கலப்பு தற்காப்புக் கலைகள், மென்பந்து டென்னிஸ் மற்றும் சில குறிப்பிட்ட படகுப் போட்டிகள் போன்ற விளையாட்டுகளில், இந்திய வீரர்கள் முதன்முறையாக பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், இதுவரை பதக்கமே வென்றிராத விளையாட்டுகளில் கூட, இன்று இந்தியா பதக்கங்களை வென்று வருகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2324078&reg=3&lang=1

(Release ID: 2324078)

****

TV/SV/SH