Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் சோனம் உத்தம் மாஸ்கர், இளவேனில் வாலரிவன், விதர்சா கே வினோத் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து


2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சோனம் உத்தம் மாஸ்கர், இளவேனில் வாலரிவன், விதர்சா கே வினோத் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர்களுடைய வெற்றி, வரும் காலங்களில் பல விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கடின உழைப்பும் குழுப்பணியும் சிறப்பான முடிவுக்கு வழிவகுக்கும்!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைபிள் மகளிர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சோனம் உத்தம் மாஸ்கர், இளவேனில் வாலரிவன், விதர்சா கே வினோத் ஆகியோர் குறித்து பெருமிதம் கொள்கிறேன்.

அவர்களின் வெற்றி, வரும் காலங்களில் பல விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்: பிரதமர் நரேந்திரமோடி”

***

(Release ID: 2312715)

TV/PLM/RJ