Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹிமான்ஷு தில்லானுக்குப் பிரதமர் வாழ்த்து


2026ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஹிமான்ஷு தில்லானுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது சிறப்பான செயல்பாட்டைக் கண்டு இந்தியா பெருமிதம் கொள்வதாகத் திரு மோடி கூறினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

 

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஹிமான்ஷு தில்லான் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்! நெருக்கடியான சூழ்நிலையிலும் அவர் வெளிப்படுத்திய நிதானமும், துல்லியமான செயல்பாடும் பாராட்டுக்குரியவை.  இந்தச் சிறப்பான சாதனைக்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது செயல்பாட்டைக் கண்டு இந்தியா பெருமிதம் கொள்கிறது: பிரதமர் @narendramodi”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313168&reg=3&lang=1

****

TV/BR/SH