Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 மீட்டர் கலப்புக் குழுத் தொடர் ஒட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 மீட்டர் கலப்புக் குழுத் தொடர் ஒட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியக் குழுவின் மனு, பூவம்மா, விஷால், வித்யா ராம்ராஜ் ஆகியோரின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குழுவின் வேகம், ஒருங்கிணைப்பு, மன உறுதி ஆகியவை போட்டியை விறுவிறுப்பாக்கியதுடன், இந்திய தடகள விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தருணமாக இது அமைந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“4×400 மீட்டர் கலப்புக் குழுத் தொடர் ஓட்டத்தில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாடு!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற மனு, பூவம்மா, விஷால், வித்யா ராம்ராஜ் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களது வேகம், ஒருங்கிணைப்பு, மன உறுதி ஆகியவை போட்டியை விறுவிறுப்பாக்கியதுடன், இந்திய தடகளத்துறைக்குப் பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்.”  

***

SS/SV/RJ/SE