Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற யஷ்வீர் சிங், ரோஹித் யாதவ் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டி ஈட்டி எறிதல் பிரிவில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களான யஷ்வீர் சிங், ரோஹித் யாதவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார். தனிப்பட்ட சிறந்த செயல்பாட்டுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற யஷ்வீர் சிங் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் யாதவ்வின் சாதனைகளையும் அவர் பாராட்டினார்.

இந்தியத் தடகளத் துறைக்கும், வீரர்களுக்கும் இது சிறப்பான சாதனை என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற தமது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:

“ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்க மேடையில் ஈட்டி எறிதல் பிரிவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள்!

 

தனிப்பட்ட சிறந்த செயல்பாட்டுடன் வெள்ளிப் பதக்கம் வென்ற யஷ்வீர் சிங் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற ரோஹித் யாதவ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

 

இந்தியத் தடகளத் துறைக்கும், இரு வீரர்களுக்கும் இது சிறப்பான சாதனை.  அவர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2316250&reg=3&lang=1

****

TV/BR/SH