பி.எம்.இந்தியா
சமூகத்திற்கு ஆசிரியர்கள் ஆற்றும் மகத்தான பங்களிப்பைப் பாராட்டுவதே ஆசிரியர் தினத்தின் நோக்கம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05.09.2026) எடுத்துரைத்துள்ளார். மேலும், இது டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நேற்று (04.09.2026), 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்துக்கு (பிரதமரின் இல்லம்) தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் அழைக்கப்பட்டிருந்தபோது நடைபெற்ற கலந்துரையாடல்களின் சில காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆசிரியர் தினம் என்பது நமது சமூகத்திற்கு ஆசிரியர்கள் ஆற்றும் மகத்தான பங்களிப்பைப் பாராட்டுவதாகும். மேலும், இது டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தும் நாளாகும்.
நேற்று 7, எல்கேஎம்-க்கு தேசிய ஆசிரியர் விருது பெற்றவர்கள் அழைக்கப்பட்டபோது நிகழ்ந்த சில காட்சிகள் இதோ….”
***
(Release ID: 2306879)
SS/PLM/RJ
#TeachersDay is about appreciating the strong contribution of teachers to our society. It is also a day to pay homage to Dr. S. Radhakrishnan.
— Narendra Modi (@narendramodi) September 5, 2026
Here is what happened when the National Teachers' Awards winners were invited to 7, LKM yesterday…. pic.twitter.com/LtXTvHiQoQ