Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிரியர்களின் முக்கியப் பங்களிப்புகளை எடுத்துரைக்கும் மத்திய அமைச்சரின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி எழுதிய ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

ஆசிரியர்களைக் கொண்டாடும் இந்தியாவின் தொடர்ச்சியான பாரம்பரியம், அறிவைப் போதிப்பவர்களுக்கு அளிக்கப்படும் ஆழ்ந்த மரியாதையைப் பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் எழுதியிருப்பதை பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கற்பவர்களைத் தகவல்களில் இருந்து புரிதலுக்கும், புரிதலிலிருந்து ஞானத்திற்கும் வழிநடத்துவதில் ஆசிரியர்களின் முக்கியப் பங்கை அந்தக் கட்டுரை எடுத்துக்காட்டுவதாகவும், கற்பவர்களின் நலனை மையமாக வைப்பதன் மூலம் புதிய தேசியக் கல்விக் கொள்கை -2020, இந்தத் திசையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“அறிவைப் போதிப்பவர்களுக்கு அளிக்கப்படும் ஆழ்ந்த மரியாதையை, ஆசிரியர்களைக் கொண்டாடும் இந்தியாவின் தொடர்ச்சியான பாரம்பரியம் பிரதிபலிக்கிறது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி எழுதியுள்ளார்.

கற்பவரைத் தகவல்களிலிருந்து புரிதலுக்கும், புரிதலிலிருந்து ஞானத்திற்கும் வழிநடத்துவதில் ஆசிரியரின் முக்கியப் பங்கை அவர் எடுத்துரைக்கிறார். 2020-ம் ஆண்டின் புதிய தேசியக் கல்விக் கொள்கையானது, கற்பவர்களை மையத்தில் வைப்பதன் மூலம், இந்தத் திசையில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.”

***

(Release ID: 2306928)

SS/PLM/RJ